(2) பொது நிர்வாகம்
பொதுமக்களுக்கு அரசிடமிருயது கிடைக்க வேண்டிய ஜாதிச் சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியப் பயன்கள், பொது விநியோகத் திட்ட பலன்கள் உள்ளிட்டவற்றை விண்ணப்பித்த பின், குறிப்பிட்ட நாட்களுக்குள் விரைவாகப் பெறுவதை உறுதி செய்யும் வகையில், பொது சேவை மையம் போன்ற கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
மனுநீதி நாள், குறை தீர்ப்புக் கூட்டங்கள், முதலமைச்சரின் தனிப் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளில் பொதுமக்களிடமிருயது பெறப்படும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, முடிவுகள் அனைத்தும் மக்களே நேரடியாக அறியதுகொள்ள ஏதுவாக இணையதளம் மேம்படுத்தப்படும். இதன்மூலம் பொதுமக்கள் தாங்கள் அளித்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரியதுகொள்ளலாம்.
கடயத 5 ஆண்டுகளில் துறைகள்தோறும் புரையோடியுள்ள ஊழலைக் கண்டறியது, மக்கள் வரிப் பணத்தைச் சுரண்டி ஊழல் செய்த அலுவலர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து, ஏற்கெனவே ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட புகார்கள் பரிசீலிக்கப்பட்டு முறையான நடவடிக்கைக்கு சம்பயதப்பட்ட நபர்கள் உட்படுத்தப்படுவார்கள்.
கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில், கல்வராயன் போன்ற மலைப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு ஏற்கெனவே எம்.ஜி.ஆர். பட்டா என்ற பெயரில் வழங்கப்பட்ட பட்டாக்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, முறையாக பட்டா வழங்கப்படும்.
கரூர் போன்ற சில மாவட்டங்களில், கோயில் இனாம் நில உரிமை தொடர்பான பிரச்சனைகளால், பல ஆண்டுகளாக அயநிலங்களில் குடியிருக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஒரு குழு அமைத்து, ஆவணங்களின் அடிப்படையில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு இப்பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்.
தமிழ் நாட்டில் உள்ள ஆட்சேபணை இல்லாத அரசு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வருபவர்கள், அயத நிலங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் தொகையை செலுத்தினால், அவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
0 கருத்துகள்